Lets get connected here 
இங்கு இணைவோம்   
சிந்தனை சிதறல்கள்...
  • Blog
  • About
  • Contact

விமர்சகன் என்னும் அரக்கன்

2/7/2015

0 Comments

 
என் நண்பர்களில் சிலர் நான் இப்பொழுதெல்லாம் ஏன் திரைப்படங்களை விமர்சனம் செய்வதில்லை என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக இந்த பதிவு.

சில மாதங்களுக்கு முன்பு நானும் திரைப்படங்களை உடனுக்குடன் விமர்சனம் செய்து கொண்டு தான் இருந்தேன். இந்த முக நூலில் கிடைக்கும் சில "Like" "Comments" என்னும் போதையில் மயங்கி கிடந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த மிஸ்கின் காணொளி என்னை சிந்திக்க வைத்தது என்பதை விட செருப்பால் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும்... என்னை அறியாமல் நான் பசியோடு இருந்த பல கலைஞர்களின் சோற்றில் மண்ணை வாரி இறைத்துள்ளேன் என்பதை எண்ணிய போது வெட்கி நின்றேன். குறிப்பாக 7:00 - 7:23 மிஸ்கின் சொன்ன வார்த்தைகள் மிகவும் உண்மை. 

ஒவ்வொரு கலைஞனுக்கும்அவனுடைய படைப்பு என்பது அவனுடைய பல மாத உழைப்பினால் உருவான கண்ணாடி பெட்டகம், அதை நான் சில மணி துளிகளில் விமர்சனம் என்னும் பெயரில் பறித்து உடைத்து எறிந்து விடுகிறோம், இது போன்ற விமர்சனத்தால் பல நல்ல கலைஞர்கள் பொருளாதார அளவிலும் உளவியல் அளவிலும் பாதிக்க படுகிறார்கள். நாம் சற்று சிந்தித்து பார்த்தோமே என்றால் எந்த ஒரு கலைஞணும் அவனுடைய சிறந்த படைப்பை நமக்கு தரவேண்டும் என்று தான் விரும்புகிறான் ஆனால் சில நேரங்களில் அவன் போடும் கணக்கு தப்பாகி விடுகிறது அதற்கு ரசிகர்கள் நாம் வழங்கும் எதிர்மறைவிமர்சனம் எனும் தண்டனை நம்மை அறியாமல் மிக பெரிய விளைவை அந்த கலைஞனுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அதற்காக நாம் விமர்சிக்கவே கூடாது என்று கூறவில்லை சற்று தாமதமாக சொன்னாள் சற்று நன்றாக இருக்கும். அவன் செய்த தவறை திருத்தி கொள்ள வாய்ப்பாகவும் அமையும். இந்த பதிவை படித்து ஒரு 10 பேர் சிந்தித்தால் கூட அது என் சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்வேன். தமிழ் சினிமாவிற்கு ஏற்கனவே திருட்டு CD என்னும் அரக்கன் அழித்து கொண்டு இருக்கிறான், நாம் மேலும் ஒரு அரக்கனை உருவாக வேண்டாம்.!!!

பின்குறிப்பு : அனைத்தையும் படித்துவிட்டு நீ ஒரு அஜித் ரசிகன் , அவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்துக்கு எதிர்மறை விமர்சனம் வருவதால் தான் இப்படி எழுதுகிறாய் என்று கூறினால் உங்களுக்கு நான் கூறும் தல ஸ்டைல் பதில் "வாழு வாழ விடு"...

- பா. சுதாகர்

0 Comments



Leave a Reply.

    Picture
    Sudhakar Parthasarathy சுதாகர் பார்த்தசாரதி
    This blog is all about sharing my thought to the globe... Come on folks lets get connected ...

    Archives

    January 2017
    February 2015
    August 2014
    April 2014
    February 2014
    January 2014
    December 2013

    RSS Feed

Powered by
✕