Lets get connected here 
இங்கு இணைவோம்   
சிந்தனை சிதறல்கள்...
  • Blog
  • About
  • Contact

நம்பிக்கை மனுஷிகள்

1/15/2017

0 Comments

 
என் முகநூல் நண்பர்கள் இருவரின் மூலமாக 
இந்த நம்பிக்கை சகோதரிகளை பற்றி தெரிந்து கொண்டேன்.


வானவன் மாதேவி மற்றும் இயல் இசை வல்லபி!!! அழகிய தமிழ் பெயர்கள்..

Muscular Dystrophy என்னும் அறிய நோயினால் பாதிக்கபட்ட இவர்களின் வாழ்க்கையில் படும் இன்னல்களை மீறி தன்னை போல் இருப்பவர்களின் துயரத்தை கலைய ஆதவ் அறக்கட்டளையை நிறுவி உதவி புரிந்து வருகிறார்கள்...

இந்த குறும்படத்தில் வானவன் மாதேவி கூறுவது போல் இவர்களின் நிலைமைக்கு காரணம் ராசாயன உரம் , பூச்சிகொல்லி மருந்தாக கூட இருக்கலாம் !!!
இன்று (15.1.2017), வானவன் மாதேவி இயற்கை எய்தினார் என்பதை முகநூல் மூலம் அறிந்து கொண்டேன்..

என்ன சொல்வதென்று தெரிய வில்லை..

அவரது அறக்கட்டளை அலுவலகத்தில் அவர் ஓடி இருந்த வாசகமாக அவர் சிறகு முளைத்த அன்னமாக விண் உலகை நோக்கி அவரது பயணத்தை தொடர்கிறார் !!!

"வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ
உன்னை பிடிக்காத சிலர்
உன்னை பிடிக்க வலை விரிக்கலாம்
உன்னை ஒழிக்க அம்பை எய்யலாம்
உன்னை முடக்க சிறகை நறுக்கலாம்
ஆனாலும், ஒன்றை உணர்,
பறக்கப் பிறந்தவன் நீ..."

May her soul rest in peace and may her dream come true soon !!!

நன்றி பிரபாகரன் சேரவஞ்சி இவர்களை பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு !!!!
0 Comments

தமிழன் தமிழுக்கு செய்யும் துரோகம்

1/13/2017

2 Comments

 
Picture

​ஜல்லிகட்டை வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு அமைப்பு தடை விதித்து விட்டதா ??? 
ஐயோ !!! 
தமிழ் மீதும் தமிழன் மரபு மீதும் தொடுக்கப்பட்டுள்ள போர் அல்லவா அது !!! 
நமது பாரம்பரியம் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததல்லவா !!! 
உலகிற்கே பண்பாட்டை சொல்லி கொடுத்தது நாம் தானே !!! 
இந்திய அரசும் தமிழனை வஞ்சித்து விட்டதே !!!
தமிழ்நாட்டில் மீனவன் கொள்ளப்பட்டால்
தமிழ் மீனவன் கொலை என்று கூறுகிறதே
இந்த வட இந்திய தொலைக்காட்சிகள் !!! 

வா இனி இந்தியாவில் நாம் ஒரு அங்கம் இல்லை !!!
நமக்கே நமக்கு என்று ஒரு நாடு அமைத்து கொள்வோம் !!
20 ஆண்டுகள் கழித்தும் ஜல்லிகட்டு நடக்கும் நாங்கள் நடத்தி கட்டுவோம் !!!

என்று 

என்னும், பேசும், நியாயம் கேட்கும் என் தமிழ் சகோதர சகோதிரிகளே !!!
உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள் 
நீங்களும் தமிழுக்கு துரோகம் செய்து இருக்கிறீர்கள் என்று !!!

உங்களில் எத்தனை பேர் உணர்திருக்கிறீர்கள் 
உங்களை அறியாமலே பிற மொழி தாக்கத்தை 
உங்கள் அடுத்த தலைமுறை மீது திணித்திருக்கிறீர்கள் என்று ?

புரியவில்லையா ?? கேட்டுக்கொள்ளுங்கள் உங்களுக்குள் !!! 

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வைத்துள்ள பெயர் என்ன என்று?

தமிழ் பண்பாடு காக்க நினைக்கும் நாம் 
நாம் வீட்டில் இருந்தல்லவா முதலில் அதை கொண்டு வந்திருக்க வேண்டும்?
 
தமிழ் பெயர்களும் தமிழ் வாழ ஒரு முக்கிய தேவை என்பதை என்று மறந்தீர்கள் ?

தமிழனாகிய உனக்கே தமிழ் பெயர்கள் பிடிக்கவில்லை என்றால் 
இன்ன பிற தமிழ் கலைகளில் மட்டும் உன் அக்கறை எதற்கு ?

தமிழையும் தமிழீழத்தையும் விரும்பும் என் நண்பன் ஒருவனுக்கு மகன் பிறந்தான்...
அவனிடம் கேட்டேன் 
நண்பா நீயாவது உன் மகனுக்கு தமிழில் பெயர் வைப்பாயா என்று 
அதற்கு அவனிடம் இருந்து வந்த பதில் 
"அது மிக கடினம் என் மனைவி அதற்கு சம்மதிக்க மாட்டாள்" என்று.... 
உணர்தேன் அன்று என் பாரதியின் வார்த்தையை "மெல்ல தமிழ் இனி சாகும்"

என் பிள்ளை நாளை என்னை என் இந்த பெயர் வைத்தாய் என்று 
வருத்த படக்கூடாது என்று எனும் என் தோழ தோழிகளே

உன் பிள்ளைக்கு தமிழின் பெருமையை தொன்மையை 
அவன் பெயரின் உண்மை அர்த்தத்தை உணர்த்து !!! 

உன் பிள்ளை உன்னை வாழ்த்துவான்.. வீழ்த்த மாட்டான் !!!

என் என்றால் அவன் உடம்பில் ஓடுவதும் ஒரு தமிழனின் உதிரம் தானே !!!

இவன்
- பா. சுதாகர் !!!

2 Comments

விமர்சகன் என்னும் அரக்கன்

2/7/2015

0 Comments

 
என் நண்பர்களில் சிலர் நான் இப்பொழுதெல்லாம் ஏன் திரைப்படங்களை விமர்சனம் செய்வதில்லை என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக இந்த பதிவு.

சில மாதங்களுக்கு முன்பு நானும் திரைப்படங்களை உடனுக்குடன் விமர்சனம் செய்து கொண்டு தான் இருந்தேன். இந்த முக நூலில் கிடைக்கும் சில "Like" "Comments" என்னும் போதையில் மயங்கி கிடந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த மிஸ்கின் காணொளி என்னை சிந்திக்க வைத்தது என்பதை விட செருப்பால் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும்... என்னை அறியாமல் நான் பசியோடு இருந்த பல கலைஞர்களின் சோற்றில் மண்ணை வாரி இறைத்துள்ளேன் என்பதை எண்ணிய போது வெட்கி நின்றேன். குறிப்பாக 7:00 - 7:23 மிஸ்கின் சொன்ன வார்த்தைகள் மிகவும் உண்மை. 

ஒவ்வொரு கலைஞனுக்கும்அவனுடைய படைப்பு என்பது அவனுடைய பல மாத உழைப்பினால் உருவான கண்ணாடி பெட்டகம், அதை நான் சில மணி துளிகளில் விமர்சனம் என்னும் பெயரில் பறித்து உடைத்து எறிந்து விடுகிறோம், இது போன்ற விமர்சனத்தால் பல நல்ல கலைஞர்கள் பொருளாதார அளவிலும் உளவியல் அளவிலும் பாதிக்க படுகிறார்கள். நாம் சற்று சிந்தித்து பார்த்தோமே என்றால் எந்த ஒரு கலைஞணும் அவனுடைய சிறந்த படைப்பை நமக்கு தரவேண்டும் என்று தான் விரும்புகிறான் ஆனால் சில நேரங்களில் அவன் போடும் கணக்கு தப்பாகி விடுகிறது அதற்கு ரசிகர்கள் நாம் வழங்கும் எதிர்மறைவிமர்சனம் எனும் தண்டனை நம்மை அறியாமல் மிக பெரிய விளைவை அந்த கலைஞனுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அதற்காக நாம் விமர்சிக்கவே கூடாது என்று கூறவில்லை சற்று தாமதமாக சொன்னாள் சற்று நன்றாக இருக்கும். அவன் செய்த தவறை திருத்தி கொள்ள வாய்ப்பாகவும் அமையும். இந்த பதிவை படித்து ஒரு 10 பேர் சிந்தித்தால் கூட அது என் சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்வேன். தமிழ் சினிமாவிற்கு ஏற்கனவே திருட்டு CD என்னும் அரக்கன் அழித்து கொண்டு இருக்கிறான், நாம் மேலும் ஒரு அரக்கனை உருவாக வேண்டாம்.!!!

பின்குறிப்பு : அனைத்தையும் படித்துவிட்டு நீ ஒரு அஜித் ரசிகன் , அவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்துக்கு எதிர்மறை விமர்சனம் வருவதால் தான் இப்படி எழுதுகிறாய் என்று கூறினால் உங்களுக்கு நான் கூறும் தல ஸ்டைல் பதில் "வாழு வாழ விடு"...

- பா. சுதாகர்

0 Comments

சென்னைக்கு பிறந்தநாள்

8/22/2014

0 Comments

 
Picture
சென்னையே இன்று உனக்கு பிறந்தநாளா??...

சிலருக்கு வாழ்த்து கூறும்போது "வாழ்த்த வயதில்லை" என்று கூறுவோம், 
ஆனால் அது உனக்கு மட்டும் தான் சால பொருந்தும்...

சென்னையே நீ ஆணா ? பெண்ணா ?

பெண்ணாக தான் இருக்க வேண்டும் ஏனென்றால்
பெண்னுக்கே உரித்தான அன்பு,கருணை,அரவணைப்பு
அனைத்தையும் உன்னுள் கொண்டு இருக்கிறாயே..

தன்னையும்,உன்னையும் நம்பி வந்தவர்க்கு 
பொன்னையும்,மண்ணையும் கொடுத்து
விண் அளவுக்கு உயர்த்தி விடுகிறாயே...

உன் ஸ்பரிஸத்தை தொட்ட பேருந்து நடத்துனரை கூட 
"சூப்பர் ஸ்டார்" ஆக்கிவிடுவாய்...
சாதாரண புதல்வர் கூட உன் பார்வை பட்டால் 
நாடாளும் "முதல்வர்" .ஆகிவிடுவார்...

உன்னை நாடி வந்தால் பண்னைப்புறத்து "ராசையா" கூட 
இசைஞானி ஆகிவிடுவார்...
பரமகுடி பாமரன் கூட கலைஞானி ஆகிவிடுவார்..

உன்னை நேசித்தால் ஊர் போற்றும் இசை புயல் கூட 
பார் போற்றும் ஆஸ்கர் நாயகன் ஆகி விடுவார்...

சென்னையே... 
உனக்கென்று ஒரு மொழி கொள்ளாமல் பல மொழிகளின்
கலவையை உன் மொழி ஆக்கி கொண்டாய்..
அதனால்தனோ என்னவோ, வடஇந்தியாவில் 
தென் இந்தியர்கள் அனைவரையும் உன் பெயர் (மதராஸி) கொண்டே அழைக்கிறார்கள்..

உன்மொழியின் இனிமை கேட்டால் சுவைக்காது
உணர்ந்தால் சிந்தையை விட்டு அகலாது..

உன் பெருமையை இங்கு இருப்பவர்களால் முழுமையாக உணர முடியாது..
சில காலம் வேறு நாட்டுக்கு சென்று பிறகு ஊர் திரும்பும் 
பொருளாதார அகதிகளுக்கு தான் புரியும் 
நீ அவர்களின் இரண்டாவது அன்னை என்று..
உன்னில் கால் பதிக்கும் அந்த தருணம் 
நம்மை அறியாமல் ஒரு பாதுகாப்பு உணர்வு சிரிப்பாய் வெளிப்படும்..

சென்னையே... நேற்றைய என் முன்னோர்களுக்கும் 
இன்றைய எனக்கும் நாளைய என் சந்ததியினருக்குமாய் சேர்த்து
உனக்கு ஒரு நன்றி !!!

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !!!

- பா. சுதாகர்..
ஒரு சென்னை வாசி..

0 Comments

கலங்காதே மகளே...

4/29/2014

0 Comments

 
Picture
ஏனோ இந்த புகைப்படத்தை பார்த்தபோது 
என் மனம் மிகவும் கனத்தது...

மரணத்தை புரிந்துகொள்ள முடியாத இந்த குழந்தை 
தன் தந்தைக்கு கையசைத்து பிரியாவிடை கொடுக்கிறது...

"மகளே.. 

இன்று உன் தந்தையை தியாகி 
என்று சொல்லும் இந்த உலகம்
நாளை மறந்து போகும்... 

இன்று மின்மினி பூச்சிகளாய் 
உன்னை மொய்க்கும் இந்த ஊடகங்களும்
நாளை மறைந்து போகும்...

உனக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கூட 
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளின் 
ஊழல் பட்டியலில் சேர்ந்து போகும்...

உன் தந்தையின் வளர்ச்சியை கண்டு 
பொறாமை பட்ட சில உறவுகள்
உன்னையும் உன் தாயையும் இழிவாக பேச கூடும்...

கலங்காதே... 
சுயநலம், பொறாமை, பேராசை, 
எனும் கடலால் சூழ பட்டது தான் இந்த உலகம்.
இக்கடலினை கவனமாய் கடக்க உதவ கூடிய உன் தந்தை 
எனும் துடுப்பை இழந்து விட்டாய்...

வருந்தாதே...
தன்னம்பிக்கை எனும் படகினில் கைகள் என்னும் துடுப்பை பயன்படுத்த பழகிக்கொள்...
உன்னை விட ஒரு சிறந்த ஆறுதல் உனக்கு யாராலும் கொடுக்க முடியாது...

இது முடிவல்ல ஆரம்பம்.. கவனமாய் இரு !!!

- பா. சுதாகர்
0 Comments

Kudankulam Udayakumar Interview - I am confused !!!

4/8/2014

2 Comments

 
Kudankulam Udayakumar - He need no introduction in Tamil Nadu as he is an super anti nuclear activist who is  protesting against Kudankulam Atomic Power Station and now he is the Aam Aadmi Party LS candidate from Kanyakumari Constituency.

As usual i was surfing through youtube for some videos and came across this one which made me to write this article. To be honest I need to listen to his speech twice to understand his thought.. and here are the few questions which came up in my mind...


1. He says all the scientists stays in Mumbai and Delhi and are out of risk of nuclear attack. But even in maharastra and delhi we have atomic stations and the distance between these stations and metro cities is far less than the distance between chennai and kudankulam, if he says if kudankulam can affect chennai , then i guess even tarapur and kakrapar can affect the nearby metro cities.

2. He says the koodankulam protest was there in 1980 and it is vigorous since 2012. Why not they protest this vigorous from 1980 itself, was there any PIL filed against the government at that time..? why they have waited till this time to allowed to spend 14,000 crores..? if he says it is just 14,000 crores then it is not only the money of India , here Russia's money is also involved in this !!!

3. He says kudankulam is the biggest in India , i agree , but this alone not gonna be the biggest since there are other atomic stations to come up in other part of the country like maharastra , andra pradesh and gujarat which is bigger  than kudankulam.

4. Very interesting thought at 20:14 - 20:28 , MLA and MP asingamaana padavi and yengala pudichi kondu poonalum naanga nikapooradilla... Ippa yaen avaru MP la nikiraaru.. ??? Something similar to Mr. Kejriwal.. First no to politics then entering into fierce politics to showed their incapability...

But still i want this guy to get elected in this election , because after all these speeches , he will be forced to do good for the people !!!
2 Comments

மறைந்த மூன்றாம் பிறை

2/13/2014

0 Comments

 
Picture
கலைத்தாய் தன் கண் ஒன்றை இன்று இழந்துவிட்டது...
கலைஉலகத்தின் அட்ஷயப்பாத்திரம் ஒன்று இன்று மூடி கொண்டது...
அரிதாரம் பூசாத பெண்ணின் அழகை 
ரசித்த, ரசிக்கவைத்த கண்கள் இன்று மூடி கொண்டது...
பாலசந்தரையும் மகேந்திரனையும் பிசைந்த
கலவையான நீ (பாலுமகேந்திரா) இன்று மறைந்து விட்டாய்...

தென் இந்திய திரைவானில் திறமைகள்
"மூடுபனி"யாய் மறைந்து இருந்த நேரத்தில்
"மூன்றாம் பிறையாய்" தோன்றிய உன்காலம் 
"அது ஒரு கனாகாலம்". 
தமிழ் திரைஉலகில் "நீங்கள் கேட்டவை" இதுதானே 
என்று நீ வினவி படைத்த படைப்புகள் 
என்றும்  எங்கள் நினைவில்  "அழியாத கோலங்கள்"

இன்று நீ எங்கள் "ஓலங்களுக்கு" செவி சாய்க்காமல்
இந்த உலகமெனும் "வீட்டை" விட்டு சென்று இருக்கலாம்..
ஆனால் நீ "மறுபடியும்" பிறந்து பல "வண்ண வண்ண பூக்களை"
படைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
அதுவரையில் நீ படைத்த படைப்புகள் பல "தலைமுறைகளுக்கு" 
படமாகவும் பாடமாகவும் இருக்கும் ... 

-  பா. சுதாகர்
0 Comments

I SAW MYSELF IN RAHUL GANDHI

2/1/2014

2 Comments

 
Picture

Whenever i watch Rahul Gandhi's interview with Arnab Goswami, it reminds me a debate competition which i participated in my school days (i think in my 8th standard) at Le'park inter school competition Chennai.

It was quite a different competition where each team (2 participant per team) was given 2 personality from the same profession. Each participant in the team should choose a personality among themselves and both should debate each other proving one is better than other.

One team got Rajinikanth and Kamalhassan, another team got Sachin Tendulkar and Sourav Ganguly so we (Myself and my friend Rajkumar) were bit confident and picked a chit from the lot. when we opened, it was a shock !!! we got Jawaharlal Nehru and Sardar Vallabhbhai Patel. At that age we had very little knowledge about Jawaharlal Nehru and only one information about Vallabhbhai patel that he is called "THE IRON MAN OF INDIA". At that age for me Iron Man is someone which is very strong, muscular, powerful with a good body physique. 

My friend was quite clever requesting me to take Patel !!! 

What... ??? To defend vallabhbhai patel without knowing anything about him except that he is called as "THE IRON MAN OF INDIA" that too for 2 minutes !!! What to do... suddenly he told that i am a better speaker than him (Romba Nallavanu Sollitan) so i accepted it, we prepared for 5 min (what the heck i can 
prepare) and we both went to stage and here is the conversation between Jawaharlal Nehru and Sardar Vallabhbhai Patel. 

Nehru : Hi Patel, How are you.?
Patel    : Hi Nehru, I am fine. How are you.? Nice meeting you.
Nehru : You know, i have been elected as the First Prime Minister of india.
Patel    : Oh... That good, you know people call me "IRON MAN OF INDIA".
Nehru : So what.. All people call me "chacha".
Patel    : That is different but people call "ME" as "IRON MAN OF INDIA"
Nehru : you see people out of love call me "chacha".
Patel    : Let it be. What i am trying to say is I am the "IRON MAN OF INDIA".
Nehru : See as the prime minister of india i am the powerful man in the country.
Patel    : No.. No.. being the "IRON MAN OF INDIA" i am the powerful man in                                        the country.See my muscles. 
Nehru : you know i have written many books.
Patel    : Even i have written many books.
Nehru : I played a major role in indian independence.
Patel    : I also played a major role in indian independence against britishers 
                 standing strong against them.
Nehru : All people accept me as prime minister of India.
Patel : All people accepts me as "IRON MAN OF INDIA" since i am strong and muscular.
..
..
..
Finally The judge realized he has given this topic to a wrong person and said ENOUGH and THANKS..

For me that 2 minutes was like 2 hours.. That too repeating the same sentence and nothing else.

Similarly i saw myself in Rahul Gandhi in that interview.. Whenever Arnab asks him something he said "What i am trying to say is system in this country need to change. We need to Empower women. Democracy should go to every house in this country. I see tremendous energy in this country. The youngsters in this country need to come to politics"

Rahul.. i can empathize you. I was once in your situation in my 8th standard. Dont worry things will change soon.. I know that 80 min would have been like 80 hours for you..

One thing i want to say to Arnab Goswami.. Mr. Goswami what you have done that day is a crime. You are in danger of getting arrested for "Child Harassment and Molestation".

Simply to say in my language.. 
ஆய்.. அர்ணாப்... நீ ஒரு வீரன்அ அடிச்சி இருந்த நானே தலைமை தாங்கி இந்தகோப்பைய உனக்கு வாங்கி கொடுத்து இருப்பேன். நீ அடிச்சது ஒரு புள்ளபூச்சிய.. அதனால உனக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடையாது.... இதுக்கு மேல கேள்வி கேட்டா கொலை Case ல உள்ள போயிடுவ.. இவ்வளவு அடிய வாங்கிட்டு உயிரோட நீக்கிறான்னா அத நெனச்சி பெருமா பாடுடா சின்ன பயலே... 

"Aai Mr. Arnab nee oru veerana adichi irunda naanae thalama taangi inda kopayana unakku vangi koduthu irupaen.. nee adichadu oru pulla poochiya... adanaala unakku oru vengala kinnam kooda kidayaadu da... idukumeela kelvi ketta... kola case la ulla poiduva daa... ivala adiya vangitu uyirooda nikiraen paaru da ada nenachi peruma padu da chinna payala..."

2 Comments

Jilla - My Thought

1/19/2014

0 Comments

 
Picture
At last watched the widely discussed movie of the year Jilla in Devi Theatre.

It is a movie with a good base story but a poor first half with an excellent middle half and a little lengthy final half.

Pros:
1. Actor Vijay with his screen presence is stealing the show in most of the scenes.

2. Pretty good songs and BGM by Imman. Intro song, Kandangi and Treatu song is a delight to watch.

3. Actor Sampath with his classy acting.

4. Stunt sequences are good and apt for a masala flick.

Cons:
1. Poor artist selection by Director Neason. A versatile actor like Mohan lal has been wasted with just shouting “Naan Sivan da… Sivan illama Sakthi illa da”. The story is based in Madurai and Mohan Lal speaking a tamil mixed with malayalam slang is little hard to accept. I felt actor like Raj Kiran would have suited this character pretty well.

2. The most first half comedies are pretty bad. Parotta Soori following Santhanam’s path of double meaning comedy is very disappointing. Vijay’s so called comedy with Kajal Agarwal by touching her ass is so awkward. A matured actor like Vijay who also has the inbuilt talent of comedy can do much better and should think twice before acting in such scenes.

3. Kajal Agarwal, was a real fun to see in Police Attire. 

4. Actor Vijay’s dialog delivery in few places reminds me Mahesh Babu’s dialogue delivery in Dhookudu movie. He could have tried little differently.

5. Good Actors like Azhagam Perumal, Ravi Maria were not properly utilized.

So to summarize, jilla a 3 star rated movie that can be watched once.

I know many vijay fans will say I am biased but just think and say from in depth of your heart will you allow vijay to act a similar type of movie next time. 
As a movie lover after seeing Vijay in a movie like Thupakki I want to see him in a more different character.
0 Comments

Veeram - My Thought

1/10/2014

0 Comments

 
Picture
              A perfect blend of mass action, comedy, romance and sentiment. Director Siva has read audience pulse perfectly. 
I feel it has the best ever introduction scene for Ajith when compare to his other films which justifies his nick name “Thala”. 
This movie fully revolves around Ajith and I doubt if any other hero can create this much impact for this character.

Pros:
1. Ajith’s action is phenomenal. To mention a few his Introducton, tender auction scene, train fight sequence, thiruvizha fight, the climax flight . 

2. Comedy from santhanam which made me laugh at last. Some quality comedy from him after many crap movies. But still if he should have reduced those few double meaning comedies it would have been more quality.

3. DSP’s BGM which is a big support in many scenes. It is his BGM which makes us feel the real gethu of Ajith in many scenes.

4. Cinematography is pretty awesome. A full 100 marks for the cinematographer. I loved his introduction scene and auction scene camera work.

5. No overacting Tamannah which I feel is another plus for the movie.

Cons:
1. Songs not that catchy as everyone already expected. Very poor choreography for couple of duet songs. The worst is Thangamae Thangamae song followed by Kannum Kannum song. Producer’s paisa wasted in foreign location. But still the Intro song and the jing jikka song is watchable.

2.Thambi ramaiah. Felt a little Irritating acting. Just remembered this character suits aptly for a comedian like Vadivelu. Avaru irundirunda Pinni irupaaru…

3.Ajith’s second half shaved getup takes little time to accept. Not seen him like that for many years.

Was surprised and happy to see late Abdullah (a) periyar dasan in this last movie. 

All together Veeram a perfect mass entertainer which satisfies not only Ajith fans but all kind of audience. And now we can expect Income Tax ride in producer’s house. 

My Verdict : Veeram a 4.25 star rated movie which can be watched in theatres multiple times for that one introduction scene of the Great Thala Ajith.
0 Comments
<<Previous
    Picture
    Sudhakar Parthasarathy சுதாகர் பார்த்தசாரதி
    This blog is all about sharing my thought to the globe... Come on folks lets get connected ...

    Archives

    January 2017
    February 2015
    August 2014
    April 2014
    February 2014
    January 2014
    December 2013

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.